கோபூஜை செய்வதால் இத்தனை பலன்களா?
கோபூஜையினால், கோதானத்தினால் கோர்ட் விவகாரங்கள், வழக்குகளில் வெற்றி ஏற்படும், விரோதம் நீங்கும் என்பது ஐதீகம்.
கோமாதா என்று போற்றப்படும் பசுவை வழிபடுவதே கோபூஜை. சகல தெய்வங்களும் பசுவின் உடலில் வீற்றிருப்பதாக ஐதீகம். பொதுவாக கோமாதாவை பூஜை செய்து வழிபட்டால் கோடி புண்ணியம் கிடைக்கும் என்பது முன்னோர்களின் வாக்கு. அப்படிப்பட்ட மகத்துவம் நிறைந்த கோமாதா பூஜையின் பலன்கள் குறித்து இங்கே காண்போம்.
கோபூஜையினால் தரித்திரம், துக்கம் விலகுகின்றன. கோபூஜை செய்து வந்தால் வியாபாரம் விருத்தியடையும். நிலையான லாபம் கிட்டும்.
குழந்தை பாக்கியம் பெற விரும்புபவர்கள் கோபூஜை, கோதானம் செய்தால் சிறந்த அறிவுள்ள நல்ல குழந்தைகள் பிறப்பர் என்பதற்கு நமது புராணங்களும் வரலாறுகளும் எடுத்துக்காட்டாகும்.
நவக்கிரக பீடை, நவக்கிரக தோஷம் உள்ளவர்கள் கோபூஜையைச் செய்வது சிறந்த பலனைத்தரும்.
விவாகம் நடை பெறாதிருந்தாலும், காலதாமதமாகிக் கொண்டே சென்றாலும், நல்ல வரன் அமையவில்லை என்றாலும் இந்தக் கோமாதா பூஜை அவற்றிற்கு ஒரு நல்ல தீர்வினைத் தரும். ஆணுக்கு நல்ல பெண் மனைவியாகவும், பெண்ணுக்குச் சிறந்த நற்குணமுள்ள ஆண் கணவனாகவும் கிடைக்கச் செய்யும் பூஜை இந்தக் கோமாதா பூஜை. பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேரவும், கணவன்-மனைவிக்குள் ஒற்றுமை ஓங்கவும் இந்தக் கோபூஜை செய்வது அவசியம்.
கோமாதா பூஜையினால் ரோகம்,வியாதி ஆகியவை நீங்கி ஆரோக்கிய வாழ்க்கை உருவாகிறது. செல்வச் செழிப்பு எற்படுகிறது. தரித்திரம் நீங்குகிறது. சிறந்த பசுவை, உயர்ந்த பசுவை ஸ்ரீசுக்தம் சொல்லி பூஜை செய்து, தானம் செய்ய வேண்டும். இந்தக் கோபூஜையினால், கோதானத்தினால் கோர்ட் விவகாரங்கள், வழக்குகளில் வெற்றி ஏற்படும்.விரோதம் நீங்கும்.
பிதுர் சாபம், ரிஷிகள் சாபம், மூதாதையர் சாபம் ஆகியவை நீங்குகிறது. பித்து, பைத்தியம் போன்றவை கோதானத்தினால் குணமாகி நல்ல கதி கிடைக்கிறது.சனிபகவான் தோஷம் விலகசனிக்கிரக பீடை, அஷ்டமச்சனி, கண்டச்சனி, ஏழரைச்சனி போன்ற சனிக்கிரகத் தொல்லைகளிலிருந்து விடுபட, கோபூஜையும், கோதானமும் செய்ய வேண்டும்.