சுப காரியங்கள் தடையின்றி நடக்க மாவிளக்கு வழிபாடு


மாவிளக்கு வழிபாடு
x
தினத்தந்தி 11 Aug 2024 4:11 PM IST (Updated: 11 Aug 2024 4:59 PM IST)
t-max-icont-min-icon

வீட்டிலேயே மாவு இடித்துத் தயார் செய்து, குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து மாவிளக்கு தீபம் ஏற்றுவதால் குடும்பத்தில் மென்மேலும் நன்மைகள் அதிகரிக்கும்.

தெய்வ சன்னதியில் ஏற்றப்படும் பலவிதமான தீபங்களில் மாவிளக்கு பிரார்த்தனையாக செய்வது வழக்கத்தில் இருக்கிறது. குறிப்பாக அம்மன் கோவில்களில் மாவிளக்கு வழிபாடு முக்கியத்துவம் வாய்ந்தது.

பச்சரிசி மாவையும், வெல்லம், எலக்காய் போன்ற வாசனை பொருட்களை ஒன்றாக சேர்த்து, அதில் சிறிது நெய்விட்டு மாவாகப் பிசைந்து, அந்த மாவை வாழை இலையின் நடுவில் பரப்பி அந்த மாவின் மையப்பகுதியில் குழி போல் செய்து அதில் நெய் விட்டுத் திரி போட்டு தீபம் ஏற்றி தெய்வ சன்னதியில் குறிப்பாக அம்மன் சன்னதியில் வைத்து, பிரதட்சணம் செய்து, நமஸ்காரம் செய்து வேண்டிக் கொள்வதே மாவிளக்கு போடுதல் எனப்படுகிறது.

குடும்பத்தில் திருமணம், கிரகப்பிரவேசம், சீமந்தம் போன்ற மங்கள் நிகழ்ச்சிகள் நடக்கும் முன்னர் இவ்வாறு குலதெய்வத்துக்கு மாவிளக்கு போட்டுப் பிரார்த்தித்துக் கொள்வதால், நிகழ்ச்சிகள் தடங்கலின்றி நடக்கக் காரணமாக அமையும். மேலும், குடுப்பத்திலும் வருடத்துக்கு ஒரு முறை தெய்வ சன்னதியில் அல்லது வீட்டில் நல்ல நாள் பார்த்து உரல் உலக்கை கொண்டு தன் வீட்டிலேயே மாவு இடித்துத் தயார் செய்து, குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து அம்பாள் சன்னதியில் மாவிளக்கு தீபம் ஏற்றுவது குடும்பத்தில் மென்மேலும் நன்மைகள் அதிகரிக்கக் காரணமாக அமையும்.

இது ஆடி மாதம் என்பதால் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. இந்த மாதத்தில் அம்மனுக்கு மாவிளக்கேற்றி வழிபட்டால் அம்மன் மனம் குளிர்ந்து அருள்புரிவாள் என்பது ஐதீகம்.

மேலும் ஆன்மிக செய்திகளுக்கு.. https://www.dailythanthi.com/Others/Devotional


Next Story