'தென் மாநிலங்களில் பா.ஜ.க. அதிக இடங்களை கைப்பற்றும்'- மத்திய மந்திரி ஜெய்சங்கர் நம்பிக்கை


தென் மாநிலங்களில் பா.ஜ.க. அதிக இடங்களை கைப்பற்றும்- மத்திய மந்திரி ஜெய்சங்கர் நம்பிக்கை
x

தென் இந்தியாவில் புதிய ஆற்றல் மற்றும் உற்சாகம் இருப்பதை பார்க்க முடிகிறது என ஜெய்சங்கர் தெரிவித்தார்.

புதுடெல்லி,

கடந்த 2019 மக்களவை தேர்தலைவிட இந்த முறை தென் மாநிலங்களில் பா.ஜ.க. அதிக தொகுதிகளில் வெற்றி பெறும் என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்திருந்தார். இந்நிலையில் பா.ஜ.க. அதிக இடங்களை கைப்பற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

முன்னதாக நேற்று தெலுங்கானா மாநிலம் புவனகிரியில் பா.ஜ.க. வேட்பாளரை ஆதரித்து ஜெய்சங்கர் வாக்கு சேகரித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தென் இந்தியாவில் புதிய ஆற்றல் மற்றும் உற்சாகம் இருப்பதை பார்க்க முடிகிறது. தெலுங்கானாவிலும், மற்ற தென் மாவட்டங்களிலும் இதை நான் கண்டேன். எனவே இந்த முறை தென் இந்தியாவில் பா.ஜ.க. அதிக இடங்களை கைப்பற்றுவதற்கான தீவிரமான சாத்தியக்கூறுகள் உள்ளன" என்று தெரிவித்தார்.


Next Story