காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் இன்று நடைபெறுகிறது - தேர்தல் அறிக்கை குறித்து ஆலோசனை


காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் இன்று நடைபெறுகிறது - தேர்தல் அறிக்கை குறித்து ஆலோசனை
x

காரிய கமிட்டி கூட்டத்தில் மக்களவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

புதுடெல்லி,

2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ந்தேதி தொடங்கி ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4-ந்தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இதனிடையே காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் டெல்லியில் இன்று காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நியாய யாத்திரையை பாராட்டி தீர்மானம் நிறைவேற்றபட உள்ளது.

மேலும் இந்த காரிய கமிட்டி கூட்டத்தில் மக்களவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட உள்ளது. ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம், அரசுப் பணிகளில் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு, ஊரக வேலைவாய்ப்பு திட்ட ஊதிய உயர்வு உள்ளிட்ட 25 வாக்குறுதிகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதே போல் அருணாச்சல பிரதேசம், சிக்கிம், ஒடிசா, ஆந்திரா ஆகிய நான்கு மாநில சட்டப்பேரவை தேர்தல்களுக்கான தேர்தல் அறிக்கை குறித்தும் காரிய கமிட்டி கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



Next Story