வாக்காளர்களுக்கு அழுத்தம் கொடுத்து தி.மு.க.வினர் ஓட்டு வாங்க நினைக்கிறார்கள்- ஜி.கே.வாசன்


வாக்காளர்களுக்கு அழுத்தம் கொடுத்து தி.மு.க.வினர் ஓட்டு வாங்க நினைக்கிறார்கள்- ஜி.கே.வாசன்
x

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு வரும் நாட்களில் மேலும் பலமாக இருக்க வேண்டும் என ஜி.கே.வாசன் கூறினார் .

சென்னை,

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் இன்று தேர்தல் அறிக்கை வெளியிட்டு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

காவிரி மேலாண்மை கூட்டம் ஏப்ரல் 4-ந்தேதி நடைபெற உள்ளது. தமிழக அரசு விவசாயிகளுக்கு ஆதரவாக செயல்படும். கூட்டணிக்காக பெங்களூரு செல்லும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காவிரி நீருக்காக பெங்களூர் செல்லவில்லை. தேர்தல் முறையாக நடக்க வேண்டும். தேர்தல் ஆணையம் முறையாக கண்காணிக்க வேண்டும். தமிழகத்தில் ஆளும் எதிர்க்கட்சிகள் விதிமீறலை தொடங்கிவிட்டன.ஆளுங்கட்சியின் நோக்கமே வாக்காளர்களுக்கு அழுத்தத்தை கொடுத்து வாக்கு வாங்க நினைக்கிறார்கள். மக்கள் தி.மு.க.வுக்கு எதிராக இருக்கிறார்கள் என்று நினைக்கும்போது இந்தியை பற்றி பேசுகிறார்கள். மக்கள் ஏமாறமாட்டார்கள். தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு வரும் நாட்களில் மேலும் பலமாக இருக்க வேண்டும். என்று தெரிவித்துள்ளார்


Next Story