தி.மு.க. தேர்தலில் ஜெயித்தால் வாக்குறுதிகளை நிறைவேற்ற மாட்டார்கள் - நடிகை விந்தியா


தி.மு.க. தேர்தலில் ஜெயித்தால் வாக்குறுதிகளை நிறைவேற்ற மாட்டார்கள் - நடிகை விந்தியா
x

அ.தி.மு.க. வெற்றி பெற்றால் நாடு நல்லா இருக்கும் என்று நடிகை விந்தியா கூறினார்.

கோவை,

தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் வருகிற 19-ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் பிரச்சாரத்திற்கு இன்னும் 3 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் பிரச்சாரம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. கோவையில் அ.தி.மு.க. வேட்பாளர் சிங்கை ராமசந்திரனுக்கு ஆதரவாக நடிகை விந்தியா பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர்,

அண்ணாமலையும் மோடியும் பா.ஜ.க.,வும் ஜெயித்தால் இந்திய மக்கள் சந்திக்கின்ற கடைசி தேர்தல் இதுவாகத்தான் இருக்கும். இன்னும் ஓர் சுதந்திர போராட்டம் நடத்த வேண்டி இருக்கும். இதை நான் சொல்லவில்லை பா.ஜ.க.,வின் மத்திய நிதி மந்திரி ஆன நிர்மலா சீதாராமன் கணவரே சொல்லியிருக்கிறார்.

மோடியும், நிர்மலா சீதாராமனும், அண்ணாமலையும், ராகுல் காந்தியும் ரோடு ஷோ நடத்தி வித்தை காட்டிக் கொண்டிருக்கின்றனர். இதைப் பற்றி கூறினால் எடப்பாடியும் ரோடு ஷோ நடத்துங்கள் என்று கூறுகிறார்கள். கைத்தட்டல் வாங்க வேண்டும் என்றால் குரங்கு தான் வித்தை காட்ட முடியும். எங்கள் தலைவர் சிங்கம் மாதிரி இருப்பதால் தலைவர் இருக்கும் இடத்திற்கே கூட்டம் தேடி வரும். ஆனால் பா.ஜ.க.,வினர் கூட்டம் இருக்கும் இடத்தை பார்த்து தேடிப்போய் கூட்டம் நடத்த வேண்டும்.

தமிழ்நாட்டு மக்களுக்கு தி.மு.க. ஒரு நல்ல திட்டத்தை 3 வருடத்தில் செய்து உள்ளார்களா? அ.தி.மு.க. காலத்தில் செயல்படுத்தப்பட்ட பல்வேறு நல்ல திட்டங்களை தி.மு.க. அரசு நிறுத்தி விட்டது. தி.மு.க. தேர்தலில் ஜெயித்தால் வாக்குறுதிகளை நிறைவேற்ற மாட்டார்கள். மக்களை ஏமாற்றுவதுதான் தி.மு.க.,வின் வேலை. தேர்தலுக்கு முன் மக்களும், தேர்தலுக்கு பின் குடும்பம்தான் தி.மு.க.விற்கு முக்கியம். வீட்டுக்கு வரும் திருடனை நம்புங்கள், தி.மு.க.,வை நம்பாதிங்க. அ.தி.மு.க. வெற்றி பெற்றால் நாடு நல்லா இருக்கும். அ.தி.மு.க., எம்.பிகள் டெல்லியில் காவல் தெய்வமாக இருப்பார்கள் என விந்தியா தெரிவித்தார்.


Next Story