தொண்டர்களை நோக்கி முத்தங்களை பறக்க விட்ட முன்னாள் அமைச்சர்


தொண்டர்களை நோக்கி முத்தங்களை பறக்க விட்ட முன்னாள்  அமைச்சர்
x

புதுவை நாடாளுமன்ற தொகுதியில் பா.ஜனதா சார்பில் அமைச்சர் நமச்சிவாயம் போட்டியிடுகிறார்.

புதுச்சேரி,

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் முதல் கட்டமாக வருகிற 19-ந் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 9 நாட்களே இருக்கும் நிலையில், தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சி தலைவர்கள் தமிழகத்தில் சூறாவளி பிரசாரம் செய்து கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்து வருகிறார்கள்.

புதுவை நாடாளுமன்ற தொகுதியில் பா.ஜனதா சார்பில் அமைச்சர் நமச்சிவாயம் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக முதல்-அமைச்சர் ரங்கசாமி தீவிர பிரசாரம் செய்து வருகிறார். தற்போது காரைக்காலில் வாக்காளர்களை சந்தித்து என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜனதா கட்சியினருடன் சென்று முதல்-அமைச்சர் ரங்கசாமி நேற்று 2-வது நாளாக திறந்த வாகனத்தில் பிரசாரம் செய்தார். அவருடன் முன்னாள் அமைச்சரும், நெடுங்காடு தொகுதி எம்.எல்.ஏ.வுமான சந்திரபிரியங்காவும் கலந்து கொண்டு ஆதரவு திரட்டினார்.

நெடுங்காடு பகுதியில் பிரசாரம் செய்தபோது முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம் முன்னிலையில் தொண்டர்களை பார்த்து சந்திர பிரியங்கா எம்.எல்.ஏ. பறக்கும் முத்தங்களை தெறிக்க விட்டார். இதனால் அங்கு கூடி இருந்த தொண்டர்கள் உற்சாகத்தில் பதில் முத்தம் அனுப்பினர். அதை சந்திரபிரியங்கா கையால் ஏற்றுக் கொண்டது பிரசாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.


Next Story