'குக்கர் மாதிரி தானே அவர் முகமும் இருக்கிறது...' - டி.டி.வி.தினகரன் மனைவி அனுராதா பிரசாரம்


குக்கர் மாதிரி தானே அவர் முகமும் இருக்கிறது... - டி.டி.வி.தினகரன் மனைவி அனுராதா பிரசாரம்
x
தினத்தந்தி 12 April 2024 4:25 PM IST (Updated: 12 April 2024 5:24 PM IST)
t-max-icont-min-icon

குக்கரை பார்க்கும்போது டி.டி.வி.தினகரனின் நியாபகம் வர வேண்டும் என அவரது மனைவி அனுராதா கூறினார்.

மதுரை,

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க கூட்டணியில் தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனை ஆதரித்து, அவரது மனைவி அனுராதா முதன்முறையாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் மதுரை உசிலம்பட்டியில் நடைபெற்ற பிரசாரத்தின்போது அவர் பேசியதாவது;-

"குக்கர் சின்னம் ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றி பெற்ற சின்னம். அங்கு வாக்குப்பதிவு நடைபெற்றபோது குக்கர் சின்னத்திற்கான பட்டனே தேய்ந்துவிட்டது என்று அதிகாரிகள் சொன்னார்கள். அதே போல் தேனி தொகுதியில் அதிக வாக்கு வித்தியாசத்தில் டி.டி.வி.தினகரனை நீங்கள் வெற்றி பெற வைக்க வேண்டும்.

தினமும் வீட்டில் நீங்கள் குக்கரை பார்க்கும்போது உங்களுக்கு டி.டி.வி.தினகரனின் நியாபகம் வர வேண்டும். குக்கரைப் போல் தானே அவரது முகமும் குண்டாக இருக்கிறது. குக்கருக்கு போடப்படும் ஒவ்வொடு ஓட்டும் உங்கள் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்கான ஓட்டு."

இவ்வாறு அனுராதா பேசினார்.

1 More update

Next Story