நல்லவர்களுக்கு வாக்கு கேட்டு வருவது எனக்கு பெருமையாக இருக்கிறது - கமல்ஹாசன்


நல்லவர்களுக்கு வாக்கு கேட்டு வருவது எனக்கு பெருமையாக இருக்கிறது - கமல்ஹாசன்
x

தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கமல்ஹாசன் தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்

மதுரை,

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.அந்த வகையில் அவர் இன்று மதுரை ஆனையூரில் மாலை 6 மணிக்கும், இரவு 7 மணிக்கு புதூர் பேருந்து நிலையத்திலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறார். இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் மதியம் அவர் மதுரைக்கு வருகை தந்தார்.

தொடர்ந்து விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது,

சிறப்பாக பணியாற்றி வரும் வெங்கடேசனுக்காக நான் வாக்கு சேகரிக்க வந்திருக்கிறேன். நல்லவர்களுக்கு மீண்டும் வாக்கு கேட்டு வருவது எனக்கு பெருமையாக இருக்கிறது. இந்த தேர்தல் பிரசாரம் நல்லபடியாக போய்க் கொண்டிருக்கிறது என்றார்.

1 More update

Next Story