தென்காசி தொகுதியில் கிருஷ்ணசாமி இரட்டை இலையில் போட்டி


தென்காசி தொகுதியில் கிருஷ்ணசாமி இரட்டை இலையில் போட்டி
x

அ.தி.மு.க கூட்டணியில் தென்காசி தொகுதியில் போட்டியிடும் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிடுகிறார்.

சென்னை,

மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாட்டில் நடைபெற உள்ளது. வேட்பு மனு தாக்கல் இன்றுடன் நிறைவடைந்துள்ளது. வாக்குப்பதிவு நாள் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. அ.தி.மு.க.வை பொறுத்தவரை, தே.மு.தி.க., எஸ்.டி.பி.ஐ, புதிய தமிழகம் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளது. தமிழகம்,புதுவையில் 33 தொகுதிகளில் அ.தி.மு.க நேரடியாக போட்டியிடுகிறது.

இந்நிலையில் தென்காசி மக்களவைத் தொகுதியில் தனிச்சின்னத்திற்கு பதிலாக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட புதிய தமிழகம் கட்சி முடிவு செய்துள்ளது. இந்தநிலையில், இது குறித்து புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:- தென்காசி தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறேன். இதற்காக என்னை யாரும் நிர்பந்திக்கவில்லை என்றார்.

டிவி சின்னம் கோரி தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்தும் அது கிடைக்காததால் இம்முடிவு என தகவல் வெளியாகி உள்ளது.


Next Story