தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் இன்று வெப்ப அலை வீசும்: வாக்குப்பதிவு சதவீதத்தை பாதிக்குமா..?


தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் இன்று வெப்ப அலை வீசும்: வாக்குப்பதிவு சதவீதத்தை பாதிக்குமா..?
x

Image Courtacy: ANI

தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் இன்று கடுமையான வெயில் சுட்டெரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற 2-ம் கட்ட தேர்தல் இன்று நடக்கிறது. இதில் நாட்டின் 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உட்பட்ட 88 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இந்த மாநிலங்களில் இன்று கடுமையான வெயில் சுட்டெரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. குறிப்பாக சில மாநிலங்களில் வெப்ப அலை வீசும் என கூறப்பட்டு உள்ளது.

அந்தவகையில் மேற்கு வங்காளம், ஒடிசா, பீகார், ஜார்கண்ட், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மற்றும் உத்தரபிரதேசத்தின் பல பகுதிகளில் இன்று முதல் 5 நாட்களுக்கு சாதாரண வெப்ப அலை முதல் கடுமையான வெப்ப அலை வரை வீசும் என கணிக்கப்பட்டு உள்ளது.

இதனால் மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசாவுக்கு சிவப்பு எச்சரிக்கையும், பீகார் மற்றும் கர்நாடகாவுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடப்பட்டு உள்ளது.

ஏற்கனவே கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில், வெப்ப அலையும் வீசும் என கூறப்பட்டு உள்ளதால் இன்றைய தேர்தலில் வாக்குப்பதிவு குறையக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டு உள்ளது. இது அரசியல் கட்சியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Next Story