மக்களவை தேர்தல்: உத்தர பிரதேசத்தில் பா.ஜ.க. எம்.பி.யை எதிர்த்து போட்டியிடும் மனைவி
ராம்சங்கர் கத்தேரியாவை எதிர்த்து அவரது மனைவி மிருதுளா சுயேச்சையாக போட்டியிடுகிறார்.
இட்டாவா,
உத்தர பிரதேசத்தின் இட்டாவா தொகுதி பா.ஜ.க. எம்.பி.யாக இருப்பவர் ராம்சங்கர் கத்தேரியா. முன்னாள் மத்திய மந்திரியான இவர், மீண்டும் அதே தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக களம் இறங்கியுள்ளார். இவரை எதிர்த்து இவரது மனைவி மிருதுளா சுயேச்சையாக போட்டியிடுகிறார். அவர் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
இதுகுறித்து மிருதுளா கூறுகையில், 'இது ஜனநாயக நாடு. தேர்தலில் யார் வேண்டுமானாலும், யாரை எதிர்த்தும் போட்டியிடலாம்' என்று கூறினார். கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலிலும் இதேபோல் சுயேச்சையாக போட்டியிட மனு தாக்கல் செய்தார். பின்னர் அந்த மனுவை அவர் வாபஸ் பெற்றது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story