தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெறும் - வாக்களித்த பின் ராமதாஸ் பேட்டி


தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெறும் - வாக்களித்த பின் ராமதாஸ் பேட்டி
x
தினத்தந்தி 19 April 2024 10:23 AM IST (Updated: 19 April 2024 11:34 AM IST)
t-max-icont-min-icon

தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெறும் என ராமதாஸ் கூறினார்.

திண்டிவனம்,

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் நாடாளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் நடைபெற்று வருகிறது. காலையில் இருந்தே மக்கள் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.

திண்டிவனம் மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள ஸ்ரீமரகதாம்பிகை அரசு உதவி பெறும் பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று காலை 8 மணிக்கு தனது வாக்கைப்பதிவு செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது,

"மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். அதனால் நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெறும். நரேந்திர மோடி 3-வது முறையாக பிரதமர் ஆக வேண்டும். அதுவே இந்திய நாட்டுக்கு நன்மை பயக்கும். அனைவரும் சமத்துவம், சகோதரத்துவத்துடன் வாழ தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற வேண்டும். "

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story