புதிய பட்டியல்: வயது வாரியாக வாக்காளர் எண்ணிக்கை - தேர்தல் கமிஷன் அறிவிப்பு


புதிய பட்டியல்: வயது வாரியாக வாக்காளர் எண்ணிக்கை - தேர்தல் கமிஷன் அறிவிப்பு
x

வாக்குப்பதிவில் பங்கேற்கத் தகுதி உடைய புதிய வாக்காளர் பட்டியலை சமீபத்தில் இந்திய தேர்தல் கமிஷன் வெளியிட்டது.

சென்னை,

தமிழகத்தில் நடைபெற இருக்கும் வாக்குப்பதிவில் பங்கேற்கத் தகுதி உடைய புதிய வாக்காளர் பட்டியலை சமீபத்தில் இந்திய தேர்தல் கமிஷன் வெளியிட்டது.

அதன்படி மொத்தம் 6 கோடியே 23 லட்சத்து 33 ஆயிரத்து 925 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 3 கோடியே 6 லட்சத்து 5 ஆயிரத்து 793 பேர் ஆண்கள்; 3 கோடியே 17 லட்சத்து 19 ஆயிரத்து 665 பேர் பெண்கள்; 8,467 பேர் மூன்றாம் பாலினத்தவர்.

முதல்முறை வாக்காளர்களின் (18 முதல் 19 வயது வரை) எண்ணிக்கை 10 லட்சத்து 92 ஆயிரத்து 420. அவர்களில் 5 லட்சத்து 85 ஆயிரத்து 153 பேர் ஆண்கள். 5 லட்சத்து 7 ஆயிரத்து 113 பேர் பெண்கள். 154 பேர் மூன்றாம் பாலினத்தவர். இந்த வயதினர் மற்றும் 110-119 வயதினரில் பெண்களைவிட ஆண்களின் எண்ணிக்கை (78 ஆயிரத்து 40 பேர்) அதிகமாக உள்ளது.

20-29 வயதுடையவர்கள் 1.10 கோடி; 30-39 - 1.29 கோடி; 40-49 - 1.38 கோடி; 50-59 - 1.10 கோடி; 60-69 - 71.64 லட்சம்; 70-79 - 38.66 லட்சம்; 80-89 - 12.38 லட்சம்; 90-99 - 2.01 லட்சம்; 100-109 - 5,368; 110-119 - 114 (58 ஆண்கள், 55 பெண்கள், 1 மூன்றாம் பாலினத்தவர்); 120 வயதுக்கு மேற்பட்டோர் 55 பேர்.


Next Story