4-ம் கட்ட நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது


4-ம் கட்ட நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது
x

நாடாளுமன்ற தேர்தலின் 4-ம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியுள்ளது.

புதுடெல்லி,

நாடு முழுவதும் 18-வது நாடாளுமன்ற தேர்தல் நாளை (ஏப்ரல் 19) தொடங்கி வரும் ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழகம்-புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் முதல் கட்டத்திலேயே தேர்தல் நடக்கிறது. இந்த 40 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.

இந்த நிலையில், ஏழு கட்டங்களாக நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலின் 4-ம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கி உள்ளது. தேர்தலுக்கான வாக்குப்பதிவு மே 13-ம் தேதி நடைபெறுகிறது.

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம், தெலங்கானா, பீகார், ஜார்க்கண்ட், மத்தியபிரதேசம், மராட்டியம், ஒடிசா, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களின் பல்வேறு தொகுதிகள் 4-வது கட்ட தேர்தலை எதிர்கொள்கின்றன. ஆந்திரபிரதேசத்தில் மே 13-ம் தேதி நாடாளுமன்ற தேர்தலுடன், சட்டப்பேரவைத் தேர்தலும் நடைபெறவுள்ளது.


Next Story