நாம் தமிழர் கட்சி வேட்பாளருடன் பாமக பிரமுகர் கடும் வாக்குவாதம்


நாம் தமிழர் கட்சி வேட்பாளருடன் பாமக பிரமுகர் கடும் வாக்குவாதம்
x

நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் நடைபெற்று வருகிறது.

சேலம்,

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு தொடங்கியது முதலே அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் ஆர்வத்துடன் வந்து தங்களது வாக்கினை பதிவு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், சேலம் மேட்டூர் அருகே வாக்களிக்க வந்த கிருஷ்ணகிரி நாம் தமிழர் கட்சி வேட்பாளரும் வீரப்பனின் மகளுமான வித்யா ராணி உடன் பாமக பிரமுகர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

வித்யா ராணி உடன் அவரது ஆதரவாளர்களும் வாக்குச்சாவடிக்கு உள்ளே வந்ததற்கு பாமக பிரமுகர் கோவிந்தன் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால், இரு தரப்பு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

1 More update

Next Story