ஆந்திர முதல்-மந்திரி மீது கல்வீச்சு - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்


ஆந்திர முதல்-மந்திரி மீது கல்வீச்சு - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
x

அரசியல் வேறுபாடுகள் வன்முறையாக மாறக்கூடாது என முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

சென்னை,

ஆந்திரப் பிரதேச முதல்-மந்திரி ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி, விஜயவாடாவில் இன்று நடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது அடையாளம் தெரியாத நபரின் கல்வீச்சு தாக்குதலில் காயமடைந்தார்.இதில் ஜெகன் மோகன் ரெட்டியின் இடது புருவத்தில் கடுமையான காயம் ஏற்பட்டது. உடனடியாக அவருக்கு பேருந்தில் இருந்த டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். இந்த தாக்குதலில் முதல்-மந்திரிக்கு அருகில் இருந்த எம்.எல்.ஏ. வெள்ளம்பள்ளியின் இடது கண்ணிலும் காயம் ஏற்பட்டதுஇந்நிலையில் கல்வீசி தாக்குதல் நடத்திய மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் ஜெகன் மோகன் ரெட்டி, மீதான தாக்குதலுக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் ,

ஆந்திர முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி மீது கல் வீசப்பட்டதை கண்டிக்கிறேன். அரசியல் வேறுபாடுகள் வன்முறையாக மாறக்கூடாது. ஜனநாயக செயல்பாட்டில் ஈடுபடும்போது நாகரீகத்தையும் பரஸ்பர மரியாதையையும் நிலைநாட்ட வேண்டும். ஜெகன் மோகன் ரெட்டி விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்.என தெரிவித்துள்ளார்.


Next Story