அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் இன்று ஆலோசனை


அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் இன்று ஆலோசனை
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 3 April 2024 2:00 AM GMT (Updated: 3 April 2024 3:27 AM GMT)

தேர்தல் ஏற்பாடுகள் குறித்து அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் ஏப்ரல் 19-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

இந்த நிலையில் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் இன்று மாலை ஆலோசனை நடத்துகிறார். காணொலி காட்சி வாயிலாக நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில், நாடு முழுவதும் உள்ள மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள், தலைமைச் செயலாளர்கள் மற்றும் டிஜிபிகள் பங்கேற்க உள்ளனர்.


Next Story