நாளை காலை வெளியாகிறது தமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்


நாளை காலை வெளியாகிறது தமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்
x
தினத்தந்தி 21 March 2024 6:58 PM IST (Updated: 21 March 2024 7:11 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் 10 இடங்களில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில், தமிழகத்தில் போட்டியிடும் கட்சிகள், தங்களது வேட்பாளர்களை அறிவிவித்து வருகின்றன. தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் 10 இடங்களில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது.

தமிழகத்தில் காங்கிரஸ் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியாகும் என அக்கட்சியில் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை முன்னதாக தெரிவித்து இருந்தார்.

காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை இறுதி செய்வதற்காக டெல்லியில் மத்திய காங்கிரஸ் தேர்தல் குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, மேலிட பொறுப்பாளர் அஜாய் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, "தமிழகத்தில் காங்கிரஸ் போட்டியிடவுள்ள தொகுதிகளின் வேட்பாளர்கள் பட்டியல் நாளை காலை 10 மணிக்கு அறிவிக்கப்படும்" என தெரிவித்து உள்ளார்.


Next Story