கடந்த தேர்தலை விட வாக்குப்பதிவு அதிகம்


கடந்த தேர்தலை விட வாக்குப்பதிவு அதிகம்
x

இந்த நாடாளுமன்ற தேர்தலில் 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

சென்னை,

தமிழகத்தில் கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் 18-ந்தேதி நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. வேலூர் தொகுதி நீங்கலாக 38 தொகுதிகளுக்கு அப்போது நடந்த தேர்தலில் மொத்தம் 71.90 சதவீத வாக்குகள் பதிவாகின. அதிகபட்சமாக தர்மபுரி தொகுதியில் 80.49 சதவீத வாக்குகளும், குறைவாக தென்சென்னை தொகுதியில் 56.34 சதவீத வாக்குகளும் பதிவாகி இருந்தது. அதே ஆண்டு ஆகஸ்டு மாதம் 5-ந்தேதி வேலூர் தொகுதிக்கு மட்டும் நடந்த தேர்தலில் 72 சதவீத வாக்குகள் பதிவாகின.

இந்த நாடாளுமன்ற தேர்தலில் 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி தொகுதியில் 75.67 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 67.35 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன. என்றாலும், சரியான புள்ளி விவரங்களுடன் இன்று (சனிக்கிழமை) அதிகாரப்பூர்வமாக தமிழகத்தில் வாக்குப்பதிவு விவரம் அறிவிக்கப்பட இருக்கிறது.


Next Story