சென்னையில் உள்ள 3 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு மந்தம்
காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 24.37 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.
சென்னை,
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு தொடங்கியது முதலே அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் ஆர்வத்துடன் வந்து தங்களது வாக்கினை பதிவு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னையில் உள்ள 3 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு மந்தமாக உள்ளது. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 24.37 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. இதில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 26.58 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.
குறைந்தபட்சமாக சென்னையில் உள்ள 3 தொகுதிகளில் வாக்குகள் பதிவாகியுள்ளன. வடசென்னை 22.05 சதவிகிதம், தென்சென்னை 21.97 சதவிகிதம், மத்திய சென்னை 20.09 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. மற்ற தொகுதிகளை ஒப்பிடுகையில் சென்னையில் தற்போது வரை வாக்குப்பதிவு சற்று மந்தமாகவே உள்ளது.