சமூகநீதிக்கும் உதயநிதிக்கும் என்ன சம்பந்தம்? - அன்புமணி ராமதாஸ்


சமூகநீதிக்கும் உதயநிதிக்கும் என்ன சம்பந்தம்? - அன்புமணி ராமதாஸ்
x
தினத்தந்தி 11 April 2024 3:24 PM GMT (Updated: 11 April 2024 3:51 PM GMT)

சமூகநீதிக்கும் உதயநிதிக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? அவருக்கும் சினிமாவுக்கும் தான் சம்பந்தம் இருக்கிறது என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

நாமக்கல்,

தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர் கே.பி. ராமலிங்கத்தை ஆதரித்து பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தாரமங்களம் பகுதி மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர் கூறியதாவது:-

தமிழகத்தை ஆண்ட அ.தி.மு.க., ஆளும் தி.மு.க. மீது மக்கள் வெறுப்பில் உள்ளனர். சமூகநீதிக்கும் உதயநிதிக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? அவருக்கும் சினிமாவுக்கும் தான் சம்பந்தம் இருக்கிறது. தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு மாறி, மாறி வாக்களித்ததில் மது, போதைப் பொருளுக்கு அடிமையாக்கியது தான் சாதனை.

சட்டமன்றத் தேர்தலில் இரண்டு கட்சிகளும் இல்லாத ஆட்சி அமைய நாடாளுமன்றத் தேர்தல் அடித்தளமிடும். மக்களுக்கு நல்ல திட்டங்களை கொடுக்க துடித்துக் கொண்டிருக்கிறோம். என்னுடைய ஆதங்கமெல்லாம் தமிழக மக்கள் முன்னேற வேண்டும். தமிழ்நாடு முன்னேற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story