2வது டி20: அயர்லாந்து - இங்கிலாந்து அணிகள் நாளை மோதல்

இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 197 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டப்ளின்,
இங்கிலாந்து கிரிக்கெட் அணி அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 197 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணி 17.4 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 197 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 2வது டி20 போட்டி நாளை நடைபெற உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய அயர்லாந்து அணி முயற்சி செய்யும். அதேவேளை இந்த போட்டியில் வென்று தொடரை வெல்ல இங்கிலாந்து அணி முனைப்பு காட்டும்.






