இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: தென் ஆப்பிரிக்க அணி 500+ ரன்கள் முன்னிலை

தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 288 ரன்கள் முன்னிலை பெற்றது.
image courtesy:twitter/@ProteasMenCSA
image courtesy:twitter/@ProteasMenCSA
Published on

கவுகாத்தி,

இந்தியா - தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடந்து வருகிறது. இதில் டாஸ் ஜெயித்து முதலில் பேட் செய்த தென்ஆப்பிரிக்கா 489 ரன்கள் குவித்தது. செனுரன் முத்துசாமி சதம் (109 ரன்) அடித்தார்.

பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 83.5 ஓவர்களில் 201 ரன்னில் ஆல்-அவுட் ஆகி பாலோ-ஆன் ஆனது. பாலோ-ஆனை தவிர்க்க 290 ரன்கள் தேவையாக இருந்தது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 58 ரன்கள் அடித்தார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் மார்கோ ஜான்சன் 6 விக்கெட்டுகளை அள்ளினார்.

அடுத்து இந்தியாவுக்கு பாலோ-ஆன் வழங்காமல் 288 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய தென்ஆப்பிரிக்க அணி ஆட்ட நேர முடிவில் 8 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 26 ரன்கள் அடித்திருந்தது. ரையான் ரிக்கெல்டன் (13 ரன்), எய்டன் மார்கரம் (12 ரன்) களத்தில் இருந்தனர். தென்ஆப்பிரிக்கா அணி இதுவரை மொத்தம் 314 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் இருந்தது.

இந்த சூழலில் 4-வது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. தொடர்ந்து பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 59 ரன்களில் முதல் விக்கெட்டை இழந்தது. ரிக்கல்டன் 35 ரன்களில் ஆட்டமிழந்தார். சிறிது நேரத்திலேயே மார்க்ரம் 29 ரன்களில் நடையை கட்டினார். அடுத்து வந்த் பவுமா (3 ரன்) விரைவில் நடையை கட்டினார்.

இதனையடுத்து ஜோடி சேர்ந்த ஸ்டப்ஸ் - டோனி டி சோர்சி கூட்டணி சிறப்பாக ஆடி அணிக்கு வலு சேர்த்தது. இந்திய பந்துவீச்சை திறம்பட சமாளித்த இந்த ஜோடி தென் ஆப்பிரிக்க அணியின் முன்னிலையை வலுப்படுத்த உதவியது. சிறப்பாக ஆடிய இந்த ஜோடி 101 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் பிரிந்தது. டி சோர்சி (49 ரன்கள்) அரைசதம் அடிக்கும் வாய்ப்பை ஒரு ரன்னில் தவறவிட்டு ஆட்டமிழந்து வெளியேறினார்.

அடுத்து வியான் முல்டர் வந்தார். மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்டப்ஸ் அரைசதம் அடித்தார். தற்போது ஸ்டப்ஸ் - முல்டர் கூட்டணி விளையாடி வருகிறது.

தென் ஆப்பிரிக்க அணி 2-வது இன்னிங்சில் தற்போது வரை 4 விக்கெட்டுகளை இழந்து 231 ரன்கள் அடித்துள்ளது. இதன் மூலம் 519 ரன்கள் என்ற வலுவான முன்னிலையுடன் தொடர்ந்து பேட்டிங் செய்து வருகிறது. ஸ்டப்ஸ் 67 ரன்களுடனும், முல்டர் 33 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா தரப்பில் ஜடேஜா 3 விக்கெட்டுகள் வீழ்த்தி உள்ளார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com