3வது டி20 போட்டி: நேபாளத்தை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ்

Image Courtesy: @CricketNep
வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அமீர் ஜங்கூ 74 ரன்னும், அக்கீம் அகஸ்டே 41 ரன்னும் எடுத்தனர்.
சார்ஜா,
வெஸ்ட் இண்டீஸ் - நேபாளம் கிரிக்கெட் அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் சார்ஜாவில் நடைபெறுகிறது. இதில் முதல் இரு போட்டிகளில் நேபாளம் வெற்றி பெற்று தொடரை ஏற்கனவே கைப்பற்றி விட்டது. இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 3வது போட்டி நேற்று நடைபெற்றது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நேபாளம் 19.5 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 122 ரன்கள் மட்டுமே எடுத்தது. நேபாளம் தரப்பில் அதிகபட்சமாக குஷால் புர்தெல் 39 ரன் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அதிகபட்சமாக ரமோன் சிம்மண்ட்ஸ் 4 விக்கெட் வீழ்த்தினார்.
தொடர்ந்து 123 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 12.2 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 123 ரன்கள் எடுத்து ஆறுதல் வெற்றியை பதிவு செய்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அமீர் ஜங்கூ 74 ரன்னும், அக்கீம் அகஸ்டே 41 ரன்னும் எடுத்தனர்.






