பெங்களூரு அணி வெற்றி கொண்டாட்டத்தில் 9 பேர் உயிரிழப்பு: மன்னிப்பு கோரினார் டி.கே.சிவக்குமார்


பெங்களூரு அணி வெற்றி கொண்டாட்டத்தில் 9 பேர் உயிரிழப்பு: மன்னிப்பு கோரினார்  டி.கே.சிவக்குமார்
x
தினத்தந்தி 4 Jun 2025 6:50 PM IST (Updated: 4 Jun 2025 7:44 PM IST)
t-max-icont-min-icon

பெங்களூரு அணியை வரவேற்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர்.

பெங்களூரு,

18-வது ஐ.பி.எல். தொடரில் அகமதாபாத் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி இறுதிப் போட்டியை வென்று முதல் முறையாக கோப்பையை கைப்பற்றியது. இந்த வெற்றியின் மூலம் அந்த அணியின் நீண்ட கால ஏக்கம் தீர்ந்துள்ளது.இதனை கொண்டாட பெங்களூருவில் ஏற்பாடு செய்யப்பட்டது.

அதன்படி பெங்களூரு அணி வீரர்களுக்கு , கர்நாடக முதல்-மந்திரி, துணை முதல்-மந்திரி, ஆகியோர் தலைமையில் பாராட்டு நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சின்னசாமி மைதானத்தில் அவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற இருந்த நிலையில் , பெங்களூரு அணியை வரவேற்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். இந்நிலையில் வீரர்கள் வரும்வரை பொறுமையாக இருக்காமல் ஸ்டேடியத்தின் சுவர்கள் மற்றும் வேலிகளில் ரசிகர்கள் ஏறிச் செல்ல தொடங்கினர்.

இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலியாகினார். 50 மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், இந்த சம்பவத்துக்கு கர்நாடக முதல்-மந்திரி துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் மன்னிப்பு கோரியுள்ளார்.இது தொடர்பாக அவர் கூறியதாவது ,

ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தில் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை; பெங்களூரு மற்றும் கர்நாடக மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் கூட்ட நெரிசல் ஏற்படும் என்றுதான் திறந்தவெளி வாகன உலாவை ரத்து செய்தோம். 5,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கூட்டத்தை கட்டுப்படுத்த ஒத்துழைப்பு தர வேண்டும். என தெரிவித்துள்ளார் .

1 More update

Next Story