இளையோர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற பாகிஸ்தான்


இளையோர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற பாகிஸ்தான்
x

இந்திய அணி 26.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்தியா 156 ரன்கள் மட்டுமே எடுத்தது.

துபாய்,

19 வயதுக்குட்பட்டோருக்கான (இளையோர்) 12-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபாயில் நடைபெற்றது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் மாத்ரே தலைமையிலான இந்திய அணியும், யூசப் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மோதின.

இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் மாத்ரே முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இதையடுத்து, களமிறங்கிய பாகிஸ்தான் 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 347 ரன்கள் குவித்தது. அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய தொடக்க வீரர் சமீர் 113 பந்துகளில் 17 பவுண்டரிகள், 9 சிக்சர்களுடன் 172 ரன்கள் குவித்து அவுட் ஆனார்.

இதையடுத்து, 348 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக வைபவ், மாத்ரே களமிறங்கினர். மாத்ரே 2 ரன்னிலும், வைபவ் 26 ரன்னிலும் அவுட் ஆகினர். அடுத்து வந்த ஜார்ஜ் 16 ரன்னில் அவுட் ஆனார். பின்னர் வந்த வீரர்கள் அனைவரும் பாகிஸ்தான் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.

இறுதியில் இந்திய அணி 26.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்தியா 156 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்தியாவை 191 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இளையோர் ஆசிய கோப்பை சாம்பியன் பட்டத்தை பாகிஸ்தான் வென்றது.

1 More update

Next Story