அடேங்கப்பா...50 ஓவரில் 574 ரன்கள்....வரலாறு படைத்த பீகார் அணி


அடேங்கப்பா...50 ஓவரில் 574 ரன்கள்....வரலாறு படைத்த பீகார் அணி
x
தினத்தந்தி 24 Dec 2025 2:23 PM IST (Updated: 24 Dec 2025 5:19 PM IST)
t-max-icont-min-icon

பீகார் அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 574 ரன்கள் குவித்தது.

மும்பை,

33-வது விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் இன்று (புதன்கிழமை) முதல் ஜனவரி 18-ந் தேதி வரை ஆமதாபாத், ராஜ்கோட், ஜெய்ப்பூர், பெங்களூரு ஆகிய 4 நகரங்களில் நடக்கிறது..'பிளேட்' வகைப்பிரிவில் இன்று தொடங்கிய ஆட்டத்தில் பீகார் - அருணாச்சல பிரதேசம் மோதுகின்றன . இதில் டாஸ் வென்ற பீகார் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பீகார் அணியில் வைபவ் சூர்யவன்ஷி தொடக்கம் முதல் அதிரடி காட்டினார்.

பந்துகளை நாலாபுறமும் பறக்க விட்ட அவர் எதிரணி பந்துவீச்சாளர்களைஅலற விட்டார். தொடர்ந்து பவுண்டரி , சிக்ஸர்கள் பறக்க விட்ட சூர்யவன்ஷி சதமடித்தார். அவர் 190 ரன்கள் (16 பவுண்டரி, 15 சிக்ஸர்) எடுத்தார். அவருடன் சகிபுல் கனி அதிரடி காட்டி 128 ரன்கள் , ஆயுஷ் லோஹருகா 116 ரன்கள் , பியூஷ் சிங் 77 ரன்கள் விளாசினர்.

இதனால் பீகார் அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 574 ரன்கள் குவித்தது. இதன்மூலம் 50 ஓவர் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்களை குவித்த அணி என்ற சாதனையை பீகார் அணி படைத்துள்ளது.இதற்கு முன்பு 2022-ம் ஆண்டு தமிழ்நாடு அணி 506 ரன்களை குவித்தது. அதுவே லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த அணி என்ற சாதனையை படைத்திருந்தது. இன்று அந்த வரலாற்று சாதனையை பீகார் அணி முறியடித்துள்ளது.

1 More update

Next Story