ஆசிய கோப்பைக்குப்பின் டி20, ஒருநாள் தொடர்களில் மோதும் ஆப்கானிஸ்தான் - வங்காளதேசம்


ஆசிய கோப்பைக்குப்பின் டி20, ஒருநாள் தொடர்களில் மோதும் ஆப்கானிஸ்தான் - வங்காளதேசம்
x

image courtesy:ICC

ஆசிய கோப்பை தொடரில் இவ்விரு அணிகளும் ஒரே பிரிவில் இடம்பெற்றுள்ளன.

துபாய்,

17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) அடுத்த மாதம் (செப்டம்பர்) 9-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை துபாய் மற்றும் அபுதாபியில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம், ‘பி’ பிரிவில் இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.

இந்நிலையில் ஆசிய கோப்பை நிறைவடைந்ததும் ஆப்கானிஸ்தான் - வங்களாதேசம் இடையே தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடர்கள் நடைபெற உள்ளது. இந்த போட்டிகள் அனைத்தும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளன.

இதில் இவ்விரு அணிகள் இடையே முதலில் டி20 தொடர் நடைபெற உள்ளது. அதன்படி வங்காளதேசம் - ஆப்கானிஸ்தான் இடையிலான முதல் டி20 போட்டி அக்டோபர் 2-ம் தேதி நடைபெறுகிறது. ஒருநாள் தொடர் அக்டோபர் 8-ம் தேதி தொடங்குகிறது.

1 More update

Next Story