ஆஷஸ் முதல் டெஸ்ட்: ஆஸி. முன்னணி வேகப்பந்து வீச்சாளர் விலகல்


ஆஷஸ் முதல் டெஸ்ட்: ஆஸி. முன்னணி வேகப்பந்து வீச்சாளர் விலகல்
x
தினத்தந்தி 15 Nov 2025 2:49 PM IST (Updated: 15 Nov 2025 3:35 PM IST)
t-max-icont-min-icon

இவருக்கு மாற்று வீரராக மைக்கேல் நெசர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

பெர்த்,

இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 21ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரின் முதல் போட்டி வரும் 21ம் தேதி பெர்த் மைதானத்தில் தொடங்குகிறது. இந்த தொடர் வரலாற்று சிறப்பு மிக்கது என்பதால் இது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த தொடரின் முதல் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. காயம் காரணமாக கேப்டன் கம்மின்ஸ் விலகிய நிலையில் ஸ்டீவ் ஸ்மித் கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார்.

இந்நிலையில் இந்த முதல் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியிலிருந்து காயம் காரணமாக முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜோஷ் ஹேசில்வுட் விலகியுள்ளார். அவருக்கு பதிலாக மைக்கேல் நெசர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலிய அணி விவரம்: ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), சீன் அப்போட், ஸ்காட் போலந்து, அலெக்ஸ் கேரி, பிரண்டன் டாக்கெட், கேமரூன் க்ரீன், மைக்கேல் நெசர், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஸ்சேன், நாதன் லயன், மிட்செல் ஸ்டார்க், ஜேக் வெதரால்ட், பியூ வெப்ஸ்டர்.

1 More update

Next Story