ஆஷஸ் டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணிக்கு 205 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இங்கிலாந்து


ஆஷஸ் டெஸ்ட்:  ஆஸ்திரேலிய அணிக்கு 205 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இங்கிலாந்து
x
தினத்தந்தி 22 Nov 2025 12:49 PM IST (Updated: 22 Nov 2025 3:02 PM IST)
t-max-icont-min-icon

ஆஸ்திரேலியா சார்பில் ஸ்காட் போலந்து 4 விக்கெட் ஸ்டார்க் , டாக்ட் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

பெர்த்,

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதன்படி ஆஸ்திரேலியா- இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் முதல் இன்னிங்சில் 172 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக ஹாரி புரூக் 52 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலியா தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 7 விக்கெட்டுகளை அள்ளினார்.

இதனையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணியும் இங்கிலாந்து பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 39 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 123 ரன்கள் அடித்துள்ளது. நாதன் லயன் 3 ரன்களுடனும், பிரெண்டன் டாகெட் ரன் எதுவுமின்றியும் களத்தில் இருந்தனர். இன்று 2வது நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. ஆட்டம் தொடங்கிய சிறுது நேரத்திலேயே ஆஸ்திரேலிய அணி கடைசி விக்கெட்டை இழந்தது. நாதன் லியான் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதனால் ஆஸ்திரேலிய அணி 132 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் இங்கிலாந்து அணி 40 ரன்கள் முன்னிலை பெற்றது இங்கிலாந்து அணியில் ஸ்டோக்ஸ் 5 விக்கெட், கார்ஸ் 3 விக்கெட், ஆர்ச்சர் 2 விக்கெட் வீழ்த்தினர் . தொடர்ந்து 2வது இன்னிங்சில் இங்கிலாந்து அணி விளையாடியது .

தொடக்கத்தில் ஜாக் கிராலி ஸ்டார்க் பந்துவீச்சில் டக் அவுட் ஆனார். தொடர்ந்து பென் டக்கெட் , ஆலி போப் இணைந்து நிலைத்து ஆடினர் .

சிறப்பாக விளையாடிய டக்கெட் 23 ரன்களும் ஆலி போப் 38 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் ஜோ ரூட் 8 ரன்களும் , ஹாரி புரூக் ரன் எதுவும் எடுக்காமலும், ஸ்டோக்ஸ் 2 ரன்களும் , ஜேமி ஸ்மித் 15 ரன்களும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

பின்னர் அட்கின்சன் மட்டும் பொறுப்புடன் ஆடி 37 ரன்கள் எடுத்தார். இறுதியில் இங்கிலாந்து அணி 164 ரன்களுக்கு ஆட்டமிழந்தது . ஆஸ்திரேலிய அணிக்கு 205 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆஸ்திரேலியா சார்பில் ஸ்காட் போலந்து 4 விக்கெட் ஸ்டார்க் , டாக்ட் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

1 More update

Next Story