ஆஸ்திரேலியா-நியூசிலாந்து இடையிலான டி20 போட்டி: மழை காரணமாக ரத்து


ஆஸ்திரேலியா-நியூசிலாந்து இடையிலான டி20 போட்டி: மழை காரணமாக ரத்து
x

Image Courtesy: @BLACKCAPS

தினத்தந்தி 3 Oct 2025 3:26 PM IST (Updated: 3 Oct 2025 4:49 PM IST)
t-max-icont-min-icon

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது

வெல்லிங்டன்,

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் இருந்தது. இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டி20 போட்டி இன்று நடைபெறுவதாக இருந்தது.

ஆட்டம் தொடங்கும் முன்பே மழை பெய்ததன் காரணமாக இந்த ஆட்டம் 9 ஓவர்களாக குறைக்கப்பட்டது. தொடர்ந்து இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 2.1 ஓவரில் 1 விக்கெட்டை இழந்து 16 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது மீண்டும் மழை பெய்தது.

மழை நின்ற பின்னர் ஆட்டம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் மழை தொடர்ந்து பெய்ததன் காரணமாக ஆட்டம் அத்துடன் ரத்து செய்யப்பட்டது. இந்த தொடரில் இதுவரை 2 ஆட்டங்கள் முடிந்துள்ள நிலையில் ஆஸ்திரேலியா 1-0 என முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 3வது டி20 போட்டி நாளை நடக்கிறது.

1 More update

Next Story