டபிள்யூ.பி.எல் வரலாற்றில் ‘ரிட்டயர்ட் அவுட்’ ஆன முதல் வீராங்கனை - யார் தெரியுமா?

நேற்றிரவு நடந்த 6-வது லீக்கில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, குஜராத் ஜெயன்ட்சை எதிர்கொண்டது.
மும்பை,
டபிள்யூ.பி.எல். கிரிக்கெட் வரலாற்றில் ‘ரிட்டயர்ட் அவுட்’ ஆன முதல் வீராங்கனை சோனி தான்.
5 அணிகள் பங்கேற்றுள்ள 4-வது பெண்கள் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பை புறநகரான நவிமும்பையில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த 6-வது லீக்கில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, குஜராத் ஜெயன்ட்சை எதிர்கொண்டது.
இதில் முதலில் பேட் செய்த குஜராத்துக்கு சீரான இடைவெளியில் விக்கெட் விழுந்தது. சோபி டிவைன் 8 ரன்னிலும், பெத்மூனி 33 ரன்னிலும், கேப்டன் ஆஷ்லி கார்ட்னெர் 20 ரன்னிலும், கனிகா அகுஜா 35 ரன்னிலும் வீழ்ந்தனர்.
ஒரு பவுண்டரி கூட அடிக்க முடியாமல் திணறிய ஆயுஷி சோனி (11 ரன், 14 பந்து) ‘ரிட்டயர்ட் அவுட்’ கொடுத்து பாதியில் வெளியேற்றப்பட்டார். இதன் மூலம் டபிள்யூ.பி.எல். கிரிக்கெட் வரலாற்றில் ‘ரிட்டயர்ட் அவுட்’ ஆன முதல் வீராங்கனை என்ற பெயரை சோனி பெற்றார். இறுதியில் அந்த அணி மும்பைக்கு 193 என்ற கடினமான இலக்கை நிர்ணயித்தது.
இதைத்தொடர்ந்து, இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணி 19.2 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 193 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் 2-வது வெற்றியை ருசித்தது.மும்பை விரட்டிப்பிடித்த அதிகபட்ச இலக்கு இது தான்.






