பிக்பாஷ் லீக்: அஸ்வின் விலகல்.. காரணம் என்ன..?


பிக்பாஷ் லீக்: அஸ்வின் விலகல்.. காரணம் என்ன..?
x

image courtesy:PTI

15-வது பிக்பாஷ் லீக் தொடர் வருகிற டிசம்பர் 14-ந்தேதி தொடங்குகிறது.

சென்னை,

பிக்பாஷ் லீக் (பி.பி.எல்), ஆஸ்திரேலியாவில் நடக்கும் பிரபலமான டி20 லீக் போட்டியாகும். இதன் 15-வது சீசன் இந்த ஆண்டு டிசம்பர் 14-ந்தேதி முதல் ஜனவரி 25-ந்தேதி வரை ஆஸ்திரேலியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது.

இந்த போட்டியில் பங்கேற்கும் 8 அணிகளில் ஒன்றான சிட்னி தண்டர் அணி, இந்திய முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான தமிழகத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வினை ஒப்பந்தம் செய்திருந்தது. அவர் இந்த சீசனில் கடைசி கட்ட போட்டிகளில் மட்டும் விளையாட இருந்தார்.

இந்நிலையில் இந்த பிக்பாஷ் சீசனிலிருந்து முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ரவிச்சந்திரன் அஸ்வின் விலகியுள்ளார். இது தொடர்பான அறிவிப்பை அஸ்வின் தனது சமூக வலைதளம் மூலம் அறிவித்துள்ளார்.

1 More update

Next Story