பர்மிங்காம் டெஸ்ட்: முதல் ஆசிய அணியாக வரலாறு படைக்குமா இந்தியா..? ரசிகர்கள் எதிர்பார்ப்பு


பர்மிங்காம் டெஸ்ட்: முதல் ஆசிய அணியாக வரலாறு படைக்குமா இந்தியா..? ரசிகர்கள் எதிர்பார்ப்பு
x

இந்தியா-இங்கிலாந்து 2-வது டெஸ்ட் போட்டி பர்மிங்காம் மைதானத்தில் நடைபெற உள்ளது.

சென்னை,

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் நடைபெற்றது. இந்த போட்டியில் இங்கிலாந்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி தொடரை வெற்றியுடன் தொடங்கி உள்ளது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்த போட்டியில் இந்திய அணியின் பீல்டிங் படுமோசமாக இருந்தது. இது இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அத்துடன் பின்வரிசை பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினர். அதுவும் தோல்விக்கு ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது.

இந்த சூழலில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது போட்டி பர்மிங்காமில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற இரு அணிகளும் கடுமையாக தயாராகி வருகின்றன. இந்த போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டுவிட்டது. முதல் போட்டியில் இடம்பெற்றிருந்த வீரர்கள் மாற்றமின்றி உள்ளனர்.

இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் முதல் ஆசிய அணியாக மாபெரும் வரலாறு படைக்கும். அதன் விவரம் பின்வருமாறு:-

பர்மிங்காம் மைதானத்தில் இதுவரை எந்த ஆசிய அணியும் டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றதில்லை. இந்திய அணி இங்கு 8 போட்டிகளில் ஆடி 7-ல் தோல்வியும் ஒன்றில் டிராவும் கண்டுள்ளது. பாகிஸ்தானும் 8 போட்டிகளில் விளையாடி 5 தோல்வி, 3 டிரா கண்டுள்ளது. இலங்கை 2 போட்டிகளில் ஆடி இரண்டிலும் தோல்வியை கண்டுள்ளது.

இந்நிலையில் இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்று பர்மிங்காம் மைதானத்தில் வெற்றி பெற்ற முதல் ஆசிய அணியாக வரலாறு படைக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

1 More update

Next Story