பார்டர்-கவாஸ்கர் டிராபி; இந்தியா தொடரை நன்றாக தொடங்கியது சிறப்பாக உள்ளது - டி வில்லியர்ஸ்


பார்டர்-கவாஸ்கர் டிராபி; இந்தியா தொடரை நன்றாக தொடங்கியது சிறப்பாக உள்ளது - டி வில்லியர்ஸ்
x

image courtesy: twitter/@ICC

இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது.

கேப்டவுன்,

இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் பெர்த்தில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 2வது போட்டி டிசம்பர் 6ம் தேதி அடிலெய்டில் தொடங்குகிறது.

இந்நிலையில், பெர்த்தில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவி வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது குறித்து தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் டி வில்லியர்ஸ் சில கருத்துகளை கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, அது ஒரு அற்புதமான டெஸ்ட் போட்டி. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக எதுவும் இல்லை. ஆனால் உலகெங்கிலும் உள்ள நம்மில் பெரும்பாலானவர்கள் ஆஸ்திரேலிய அணி இப்படி கீழே செல்வதை பார்த்ததில்லை.

இந்தியா தொடரை நன்றாக துவங்கியதை பார்ப்பது சிறப்பாக இருக்கிறது. நியூசிலாந்துக்கு எதிராக சந்தித்த தோல்வியால் அவர்கள் இங்கே நன்றாக துவங்க வேண்டிய நிலையில் இருந்தார்கள். ஏனெனில் அவர்கள் தங்களுடைய தன்னம்பிக்கையில் பெரிய வீழ்ச்சியை சந்தித்து இருந்தார்கள். ஆனால் முதல் போட்டியில் சூழ்நிலைக்கு தகுந்தார் போல் தங்களை உட்படுத்திக் கொண்டு அவர்கள் விளையாடி வென்ற விதம் மிகவும் முக்கியம்.

முதல் இன்னிங்ஸில் 150க்கு ஆல் அவுட்டான பின்பும் அவர்கள் போராடி வந்தார்கள். பும்ரா தலைமையில் அனைவரும் பந்து வீச்சில் சேர்ந்து அட்டாக் செய்தார்கள். அப்போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் நான் ஒவ்வொரு பந்தையும் பார்த்தேன். கடினமான நேரத்தில் இருந்த விராட் கோலி அற்புதமான விளையாட்டு வீரர். அந்தப் போட்டியில் போராடி சதத்தை அடித்த போது அவருடைய முகத்தில் பெரிய நிம்மதி இருந்ததை நம்மால் பார்க்க முடிந்தது.

விராட் கோலிக்கும் இந்திய அணிக்காகவும் நான் மகிழ்ச்சி அடைகிறேன். அதே சமயம் ஆஸ்திரேலியா மீண்டு வருவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதனால் இந்த தொடர் மிகுந்த சுவாரசியம் நிறைந்த தொடராக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story