சாம்பியன்ஸ் டிராபி: ஆஸ்திரேலிய அணியில் மாற்றம்

image courtesy:ICC
சாம்பியன்ஸ் டிராபியிலிருந்து காயம் காரணமாக ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரரான மேத்யூ ஷார்ட் விலகியுள்ளார்.
சிட்னி,
8 அணிகள் இடையிலான 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றிருந்த அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் மோதின. லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடித்த அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெற்றன. இதன் லீக் சுற்று ஆட்டங்கள் நேற்றுடன் நிறைவடைந்தன.
லீக் சுற்று முடிவில் ஏ பிரிவில் இருந்து இந்தியா , நியூசிலாந்து அணிகளும், பி பிரிவில் இருந்து தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவும் அரைஇறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.
இதில் நாளை நடைபெற உள்ள முதல் அரைஇறுதி ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் துபாயில் மோதுகின்றன.
இந்நிலையில் இந்த தொடரின் எஞ்சிய போட்டிகளிலிருந்து ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஆன மேத்யூ ஷார்ட் காயம் காரணமாக விலகியுள்ளார். அவருக்கு பதிலாக ஆல் ரவுண்டர் கூப்பர் கோனொலி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலிய அணி விவரம் பின்வருமாறு:- ஸ்டீவ் சுமித் (கேப்டன்), சீன் அபோட், அலெக்ஸ் கேரி, கூப்பர் கோனொலி, பென் துவார்ஷுயிஸ், நாதன் எல்லிஸ், ஜேக் பிரேசர்-மெக்கர்க், ஆரோன் ஹார்டி, டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், ஸ்பென்சர் ஜான்சன், மார்னஸ் லபுஸ்சேன், கிளென் மேக்ஸ்வெல், தன்வீர் சங்கா, ஆடம் ஜாம்பா.






