சாம்பியன்ஸ் டிராபி: இந்திய அணிக்கு அரையிறுதி வாய்ப்பு பிரகாசம்


தினத்தந்தி 23 Feb 2025 2:06 PM IST (Updated: 23 Feb 2025 9:48 PM IST)
t-max-icont-min-icon

சாம்பியன்ஸ் டிராபியில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் ஆடி வருகின்றன.


Live Updates

  • 23 Feb 2025 5:59 PM IST

    பாகிஸ்தான் அணி 200 ரன்னுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது. 

  • 23 Feb 2025 5:12 PM IST

    முகமது ரிஸ்வான் அவுட்

    பாகிஸ்தான் கேப்டன் ரிஸ்வான் 46 ரன்களில் அவுட் ஆனார்.

  • அரைசதம் அடித்தார் சவுத் ஷகீல்
    23 Feb 2025 4:56 PM IST

    அரைசதம் அடித்தார் சவுத் ஷகீல்

    சவுத் ஷகீல் 63 பந்துகளில் அரைசதம் அடித்தார். 

  • 23 Feb 2025 4:47 PM IST

    சாம்பியன்ஸ் டிராபி: 30 ஓவர்களில் பாகிஸ்தான் 129/2

  • ஐ.சி.சி. விருதுகளை பெற்ற ஜஸ்ப்ரீத் பும்ரா
    23 Feb 2025 4:40 PM IST

    ஐ.சி.சி. விருதுகளை பெற்ற ஜஸ்ப்ரீத் பும்ரா

    பும்ரா 2024ம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர், 2024ம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர், 2024ம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் அணியில் இடம்பெற்ற விரர், 2024ம் ஆண்டின் சிறந்த டி20 அணியில் இடம்பெற்ற வீரர் என ஐ.சி.சி அறிவித்த 4 விருதுகளையும் பெற்றுக் கொண்டார்.

    இந்த விருதுகளுடன் அவர் துபாய் மைதானத்தில் புகைப்படம் எடுத்து கொண்டார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

  • 23 Feb 2025 4:13 PM IST

    சாம்பியன்ஸ் டிராபி: 20 ஓவர்களில் பாகிஸ்தான் 79/2

  • 23 Feb 2025 3:23 PM IST

    சாம்பியன்ஸ் டிராபி: 10 ஓவர்களில் பாகிஸ்தான் 52/ 2

  • 23 Feb 2025 3:15 PM IST

    முதல் விக்கெட்டை வீழ்த்திய இந்தியா

    ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சில் பாபர் அசாம் (23 ரன்) விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

  • 23 Feb 2025 3:14 PM IST

    துபாய்,

    ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் நடந்து வருகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தான் செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டம் மட்டும் துபாயில் நடக்கிறது.

    இந்த போட்டி தொடரின் 5-வது லீக் ஆட்டம் துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் பரம எதிரிகளான இந்தியா - பாகிஸ்தான் மோதுகின்றன.

    இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. அதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் முகமது ரிஸ்வான் பேட்டிங் தேர்வு செய்துள்ளார். அதன்படி இந்தியா முதலில் பந்து வீச உள்ளது.

    இரு அணிகளுக்கான பிளேயிங் லெவன் பின்வருமாறு:-

    இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல், அக்சர் படேல், ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா, ஹர்ஷித் ராணா, முகமது ஷமி மற்றும் குல்தீப் யாதவ்.

    பாகிஸ்தான்: இமாம் - உல்-ஹக், சாத் ஷகீல், பாபர் அசாம், முகமது ரிஸ்வான் (கேப்டன்), சல்மான் ஆகா, தயாப் தாஹிர், குஷ்தில் ஷா, ஷாகீன் அப்ரிடி, நசீம் ஷா, ஹரிஸ் ரவூப் மற்றும் அப்ரார் அகமது.

1 More update

Next Story