உலக கோப்பையை வென்ற இந்திய பெண்கள் கிரிக்கெட் அணிக்கு செல்வப்பெருந்தகை வாழ்த்து

தென் ஆப்பிரிக்க அணியை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய பெண்கள் அணி, சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

பெண்கள் உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய பெண்கள் அணி, சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது. வரலாற்று வெற்றியை பதிவு செய்த இந்திய அணிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. பிரதமர் மோடி, தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில் தமிழக காங்கிரஸ் தலைவர் கு. செல்வப்பெருந்தகை வெளியிட்ட வாழ்த்து செய்தியில், உலக மகளிர் கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றிருப்பது அளவற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. இந்த வெற்றியை பெற்றுத் தந்த மகளிர் அணியினரை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன்.

உலக விளையாட்டு போட்டிகளில் கிரிக்கெட் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் பங்கேற்க இளைஞர்களுக்கும், மகளிருக்கும் போதிய பயிற்சியும், வாய்ப்பு வசதிகளையும் ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் ஏற்படுத்தி தருமானால் இத்தகைய வெற்றிகளை தொடர்ந்து பெறலாம் என்பதை இந்திய மகளிர் அணியில் விளையாடிய வீராங்கனைகள் நிரூபித்துள்ளனர். இதன்மூலம் இந்தியாவின் பெருமைக்கு மகுடம் சேர்த்துள்ளனர். என்று பதிவிட்டுள்ளார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com