பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெற்றி: நாடு முழுக்க பல்வேறு இடங்களில் இந்திய ரசிகர்கள் கொண்டாட்டம்


பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெற்றி: நாடு முழுக்க பல்வேறு இடங்களில் இந்திய ரசிகர்கள் கொண்டாட்டம்
x
தினத்தந்தி 15 Sept 2025 5:33 AM IST (Updated: 15 Sept 2025 11:37 AM IST)
t-max-icont-min-icon

இந்திய அணியின் நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் ரசிகர்கள் உற்சகமாக கொண்டாடினார்கள்

புதுடெல்லி,

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் துபாயில் நேற்றிரவு நடந்த 6-வது லீக் ஆட்டத்தில் பரம எதிரிகளான இந்தியாவும், பாகிஸ்தானும் மோதின. பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் கொடூர தாக்குதல், அதற்கு இந்தியாவின் பதிலடியால் உருவான போர் பதற்றம் தணிந்த பிறகு இவ்விரு அணிகளும் சந்தித்த முதல் போட்டி என்பதால் கிரிக்கெட் உலகின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்திருந்தது.

‘டாஸ்’ வென்ற பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆஹா முதலில் பேட் செய்வதாக அறிவித்தார். இதன்படி பேட்டிங்கை தொடங்கிய பாகிஸ்தான் 9 விக்கெட்டுக்கு 127 ரன்னில் கட்டுப்படுத்தப்பட்டது. பின்னர் 128 ரன் இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்கியது.

இந்திய அணி 15.5 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 131 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. சூர்யகுமார் யாதவ் 47 ரன்களுடனும் (37 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்), ஷிவம் துபே 10 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். பாகிஸ்தான் தரப்பில் 3 விக்கெட்டுகளையும் சுழற்பந்து வீச்சாளர் சைம் அயூப் எடுத்தார்.

இந்தியாவுக்கு இது 2-வது வெற்றியாகும். ஏற்கனவே அமீரகத்தை தோற்கடித்திருந்த இந்திய அணி, சூப்பர்-4 சுற்றுக்கு முன்னேறியது. 2-வது லீக் ஆட்டத்தில் ஆடிய பாகிஸ்தானுக்கு இது முதலாவது தோல்வியாகும்.

இந்திய அணியின் வெற்றியை நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடினர். ஜம்முவிலும் வெற்றிக் கொண்டாட்டம் களை கட்டியது. பாட்னா, வாரணாசி, அகமதாபாத் என பல இடங்களிலும் திரண்ட ரசிகர்கள் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவிற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியதோடு, இந்திய அணி வெற்றி பெற்றது தங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்ததாகவும் தெரிவித்தனர்.

1 More update

Next Story