டெஸ்ட் கிரிக்கெட்டில் பீல்டிங் மிகவும் முக்கியம் - சுப்மன் கில் பேட்டி


டெஸ்ட் கிரிக்கெட்டில் பீல்டிங் மிகவும் முக்கியம் - சுப்மன் கில் பேட்டி
x

image courtesy: @BCCI

தினத்தந்தி 4 July 2025 8:45 AM IST (Updated: 4 July 2025 8:45 AM IST)
t-max-icont-min-icon

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்டில் சுப்மன் கில் இரட்டை சதம் அடித்து அசத்தினார்.

பர்மிங்காம்,

இந்தியா-இங்கிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்தியா தனது முதல் இன்னிங்சில் 587 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது.

இந்தியா தரப்பில் அபாரமாக ஆடிய கேப்டன் சுப்மன் கில் 269 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து தரப்பில் ஷோயப் பஷீர் 3 விக்கெட்டுகளும், கிறிஸ் வோக்ஸ், ஜோஷ் டங் மற்றும் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதனையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் நேற்றைய 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 77 ரன்கள் எடுத்துள்ளது.

ரூட் 18 ரன்னுடனும், புரூக் 3 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இந்திய தரப்பில் ஆகாஷ்தீப் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இன்று 3-ம் நாள் ஆட்டம் நடைபெற உள்ளது. இந்நிலையில், நேற்றைய ஆட்டம் முடிந்த பின்னர் இந்திய கேப்டன் சுப்மன் கில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

இங்கிலாந்து தொடருக்கு முன், ஐ.பி.எல் தொடர் முடிந்தவுடன் நான் பேட்டிங்கில் சில விஷயத்தில் கவனம் செலுத்தி சில மாற்றங்களை செய்தேன். அந்த மாற்றங்களுக்கான முடிவுகளை தான் தற்போது பார்த்து வருகின்றேன். தற்போது வரை எனக்கு அனைத்தும் சாதகமாக தான் மாறி இருக்கின்றது. கடந்த இரண்டு நாட்களாக நான் எந்த ஒரு கேட்ச் பயிற்சியும் எடுக்கவில்லை. ஏனென்றால் நான் தொடர்ந்து பேட்டிங் செய்து கொண்டு இருந்தேன்.

ஆனால், தற்போது ஸ்லீப்பில் நின்றவுடன் நான் பிடித்த கேட்ச் எனக்கு திருப்தியை அளித்தது. டெஸ்ட் கிரிக்கெட்டில் பீல்டிங் என்பது மிகவும் முக்கியம். அது குறித்து நாங்கள் பேசினோம். பீல்டிங் முக்கியத்துவம் குறித்து ஒவ்வொரு வீரர்களும் அறிந்திருக்கின்றோம். இன்று (நேற்று) நாங்கள் செயல்பட்டதை போல் முதல் டெஸ்ட் போட்டியில் பாதியளவு செயல்பட்டு இருந்தால் கூட முடிவுகள் வேறு மாதிரி அமைந்திருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story