இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்: இந்தியாவின் பிளேயிங் லெவனை கணித்த முன்னாள் வீரர்

image courtesy:PTI
இங்கிலாந்து - இந்தியா முதல் டெஸ்ட் வருகிற 20-ம் தேதி தொடங்க உள்ளது.
மும்பை,
இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. 4-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சிக்கு உட்பட்ட தொடர் இது என்பதால் இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
அத்துடன் ரோகித், விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்டதால் அவர்கள் இல்லாமல் இந்திய அணி எப்படி விளையாட போகிறது? என்ற கேள்வி பலரது மத்தியில் எழுந்துள்ளது. மேலும் அவர்களின் இடத்தை நிரப்பப்போவது யார்? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இத்தகைய கேள்விகளுக்கு மத்தியில் புதிய டெஸ்ட் கேப்டன் சுப்மன் கில் தலைமையில் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி இங்கிலாந்துக்கு சென்றுள்ளது. இதில் இந்தியா-இங்கிலாந்து முதல் டெஸ்ட் போட்டி வருகிற 20-ம் தேதி தொடங்க உள்ளது.
இந்நிலையில் இந்த போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனை முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கணித்துள்ளார். அந்த அணியில் கே.எல்.ராகுலை ரோகித் இடத்தில் தொடக்க ஆட்டக்காரராக தேர்வு செய்துள்ள அவர், கருண் நாயரை பிளேயிங் லெவனில் சேர்க்கவில்லை. அவருக்கு பதிலாக சாய் சுதர்சனை நம்பர் 3 இடத்தில் தேர்வு செய்துள்ளார்.
ஆகாஷ் சோப்ரா கணித்து இந்திய அணியின் பிளேயிங் லெவன்:-
ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், சாய் சுதர்சன், சுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பண்ட், நிதிஷ் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாகூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா.






