ரிஸ்வான், சூர்யகுமாரை பின்னுக்கு தள்ளி.. ஆஸ்திரிய வீரர் உலக சாதனை

20 ஓவர் கிரிக்கெட்டில் ஒரே ஆண்டில் அதிக ரன் குவித்து ஆஸ்திரிய வீரர் உலக சாதனை படைத்தார்.
இல்போவ் கவுண்டி,
ஆஸ்திரியா- ருமேனியா கிரிக்கெட் அணிகள் 4 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் ஆடியது. இதில் முதலாவது ஆட்டத்தில் 57 ரன் எடுத்த ஆஸ்திரிய தொடக்க ஆட்டக்காரர் கரன்பீர் சிங் 2-வது ஆட்டத்தில், 90 ரன்களும், 3-வது ஆட்டத்தில் 74 ரன்களும், கடைசி ஆட்டத்தில் 27 ரன்களும் எடுத்து அசத்தினார். தொடரையும் ஆஸ்திரியா 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
30 வயதான கரன்பீர் சிங் இந்த ஆண்டில் இதுவரை 32 ஆட்டத்தில் ஆடி 2 சதம், 13 அரைசதம் உள்பட 1,488 ரன்கள் சேர்த்துள்ளார். இதன் மூலம் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் ஓராண்டில் அதிக ரன் குவித்த வீரர்களின் பட்டியலில் முதல் இரு இடத்தில் இருந்த பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான் (2021-ம் ஆண்டில் 1,326 ரன்), இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் (2022-ம் ஆண்டில் 1,164 ரன்) ஆகியோரை பின்னுக்கு தள்ளி புதிய உலக சாதனை படைத்தார்.
Related Tags :
Next Story






