ஆஸ்திரேலிய பந்துவீச்சை பார்த்து கற்றுக்கொண்டேன் - லுன்கி என்கிடி

Image Courtesy: @ICC
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது
மெக்காய்,
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் கெய்ன்சில் நடந்த முதலாவது ஆட்டத்தில் 98 ரன் வித்தியாசத்திலும், மெக்காயில் நடந்த 2-வது ஆட்டத்தில் 84 ரன் வித்தியாசத்திலும் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி மெக்காய் நகரில் இன்று நடக்கிறது. இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்ற பின் ஆட்டநாயகன் விருது வென்ற லுன்கி என்கிடி அளித்த பேட்டியில் கூறியதாவது,
இரண்டாவதாக பந்துவீசுவதில் ஒர் அழகான விஷயம் இருக்கிறது. எந்த மாதிரி பந்துவீசினால் உபயோகமாக இருக்கும் என நாம் உட்கார்ந்து பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
நாதன் எல்லீஸின் திட்டங்களைப் பார்த்தேன். அவர் அதில் மிகவும் வெற்றிகரமாகவே இருந்தார். அதனால், அது எனக்கு சில திட்டங்களை அளித்தது.
சேவியர் பார்ட்லெட் புதிய பந்தில் ஸ்விங்கும் வேகமாக நகர்வதையும் பார்க்க முடிந்தது. இதிலிருந்து எது உபயோகமாகும் என்ற 'ப்ளூபிரிண்ட்' நமக்கு கிடைக்கிறது. அதை அப்படியே களத்தில் செயல்படுத்த வேண்டியதுதான். இவ்வாறு அவர் கூறினார்.






