முதல் டெஸ்ட்: இந்தியா ஏ அணிக்கு எதிராக டாஸ் வென்ற ஆஸ்திரேலியா ஏ பேட்டிங் தேர்வு


தினத்தந்தி 16 Sept 2025 9:25 AM IST (Updated: 16 Sept 2025 12:01 PM IST)
t-max-icont-min-icon

இந்தியா ஏ - ஆஸ்திரேலியா ஏ இடையே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்று தொடங்குகிறது.

லக்னோ,

ஆஸ்திரேலிய ஏ கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 இந்திய ஏ அணிக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (4 நாட்கள்) விளையாடுகிறது. அதன்படி இவ்விரு அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லக்னோவில் இன்று 9.30 மணிக்கு தொடங்க இருந்தது.

ஆனால் அங்கு தற்சமயம் மழை பெய்ததன் காரணமாக ஆட்டத்தை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் தற்போது மழை நின்றதை அடுத்து இந்த ஆட்டம் தொடங்க உள்ளது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய ஏ அணியின் கேப்டன் நாதன் மெக்ஸ்வீனி பேட்டிங் தேர்வு செய்துள்ளார். அதன்படி இந்தியா முதலில் பந்துவீச உள்ளது.

இரு அணிகளுக்கான பிளேயிங் லெவன் பின்வருமாறு:

ஆஸ்திரேலியா ஏ: நாதன் மெக்ஸ்வீனி (கேப்டன்), சாம் கோன்ஸ்டாஸ், கேம்பல் கெல்லவே, ஆலிவர் பீக், ஜோஷ் பிலிப், கூப்பர் கோனொலி, லியாம் ஸ்காட், சேவியர் பார்ட்லெட், பெர்கஸ் ஓ நீல், கோரி ரோச்சிசியோலி, டாட் மர்பி.

இந்தியா ஏ: ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), அபிமன்யு ஈஸ்வரன், சாய் சுதர்சன், என் ஜெகதீசன், தேவ்தத் பாடிக்கல், துருவ் ஜூரல், தனுஷ் கோட்டியான், ஹர்ஷ் துபே, பிரசித் கிருஷ்ணா, கலீல் அகமது, குர்னூர் ப்ரார்

1 More update

Next Story