இந்தியா- ஆஸ்திரேலியா மோதல்: மெல்போர்ன் டி20 போட்டிக்கான டிக்கெட் விற்று தீர்ந்தது

image courtesy; twitter/ @ICC
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் ஆடுகிறது.
மெல்போர்ன்,
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் ஆடுகிறது. இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி வருகிற 19-ந்தேதி பெர்த்தில் நடக்கிறது. இந்த வெள்ளைநிற பந்து போட்டி தொடரை காண ரசிகர்கள் மத்தியில் அதிக ஆர்வம் காணப்படுகிறது. 8 ஆட்டத்துக்கும் சேர்த்து இதுவரை 1 லட்சத்து 75 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளன. இன்னும் 30 ஆயிரத்துக்கும் குறைவான டிக்கெட்டுகளே எஞ்சியுள்ளன.
இதில் ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமான மெல்போர்னில் வருகிற 31-ந்தேதி இவ்விரு அணிகள் இடையே இரண்டாவது டி20 போட்டி நடக்கிறது. இந்த ஆட்டத்துக்கு ரசிகர்களுக்கு ஒதுக்கப்பட்ட அனைத்து டிக்கெட்டுகளும் முழுமையாக விற்று தீர்ந்து விட்டதாக போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். ரோகித் சர்மா, விராட் கோலி ஆகிய நட்சத்திர வீரர்கள் டி20 போட்டியில் இருந்து ஓய்வு பெற்று விட்ட போதிலும் அபிஷேக் ஷர்மா, சூர்யகுமார் யாதவ் உள்ளிட்டோரின் ‘சரவெடி’ பேட்டிங்கை பார்க்க ரசிகர்கள் தீவிரமாக உள்ளனர்.






