பந்துவீச்சில் மிரட்டிய இந்தியா...193 ரன்களை இலக்காக நிர்ணயித்த இங்கிலாந்து

இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து அணி விக்கெட்டுகளை இழந்தது.
லண்டன்,
இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்சில் நடந்து வருகிறது. இதில் முதலில் ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 387 ரன்கள் எடுத்தது. ஜோ ரூட் சதமும் (104 ரன்), ஜேமி சுமித் (51 ரன்), பிரைடன் கார்ஸ் (56 ரன்) அரைசதமும் அடித்தனர். இந்தியா தரப்பில் பும்ரா 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.இதைத்தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியும் 387 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 100 ரன்கள் அடித்தார். இங்கிலாந்து அணி தரப்பில் கிறிஸ் வோக்ஸ் 3 விக்கெட்டும், ஜோப்ரா ஆர்ச்சர், பென் ஸ்டோக்ஸ் தலா 2 விக்கெட்டும், பிரைடன் கார்ஸ், சோயிப் பஷீர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதைத்தொடர்ந்து இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சை விளையாடி வருகிறது. தொடக்கத்தில் பென் டக்கெட் 12 ரன்களில் சிராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ஆலி போப் 4 ரன்களில் வெளியேறினார் . மறுபுறம் நிலைத்து ஆடிய ஜாக் கிராலி 22 ரன்களில் வெளியேறினார் .அடுத்து களமிறங்கிய ஹாரி புரூக் 23 ரன்களில் வெளியேறினார்
பின்னர் ஜோ ரூட் , பென் ஸ்டோக்ஸ் இருவரும் நிலைத்து ஆடினர். சிறப்பாக விளையாடிய ஜோ ரூட் 40 ரன்களில் ஆட்டமிழந்தார் . பென் ஸ்டோக்ஸ் 33 ரன்களில் ஆட்டமிழந்தார் . தொடர்ந்து இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.
இறுதியில் 192 ரன்களுக்கு இங்கிலாந்து அணி ஆட்டமிழந்தது . இந்தியா சார்பில் வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட், சிராஜ், பும்ரா தலா 2 விக்கெட் , நிதிஷ் குமார் ரெட்டி , ஆகாஷ் தீப் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.






