மழை காரணமாக தடைபட்ட இந்தியா - இங்கிலாந்து முதல் டெஸ்ட்: மீண்டும் தொடக்கம்

இந்திய அணி முதல் இன்னிங்சில் 471 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
லீட்ஸ்,
இந்தியா - இங்கிலாந்து இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி லீட்சில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 113 ஓவர்களில் 471 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக கேப்டன் சுப்மன் கில் 147 ரன்களும், ரிஷப் பண்ட் 134 ரன்களும், ஜெய்ஸ்வால் 101 ரன்களும் அடித்தனர். இங்கிலாந்து தரப்பில் பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜோஷ் டங் தலா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதனையடுத்து இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை தொடங்க இருந்தது. அந்த சமயத்தில் லீட்சில் பெய்தது. இதனால் ஆட்டத்தை மீண்டும் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
இந்நிலையில் தற்போது மழை நின்றதை அடுத்து ஆட்டம் மீண்டும் தொடங்கியுள்ளது. இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பென் டக்கெட் - ஜாக் கிராலி களமிறங்கியுள்ளனர். பும்ரா முதல் ஓவரை வீசுகிறார்.






