ஐ.பி.எல். 2026: முன்னணி வீரர்களை விடுவித்த கொல்கத்தா.. ரசிகர்கள் அதிர்ச்சி

தமிழக வீரரான வருண் சக்ரவர்த்தியை கொல்கத்தா அணி தக்கவைத்துள்ளது.
image courtesy:PTI
image courtesy:PTI
Published on

கொல்கத்தா,

19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான தக்கவைக்கப்படும் மற்றும் கழற்றி விடப்படும் வீரர்களின் பட்டியலை ஒவ்வொரு அணிகளும் அறிவித்து வருகின்றன.

அதன்படி முன்னாள் சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தங்களது முன்னணி நட்சத்திர வீரர்களான ஆந்த்ரே ரசல், வெங்கடேஷ் ஐயர், டி காக் போன்றவர்களை விடுவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

கொல்கத்தா அணி விடுவித்துள்ள வீரர்களின் முழு விவரம்: ஆந்த்ரே ரசல், குயிண்டன் டி காக், வெங்கடேஷ் ஐயர், மொயீன் அலி, ஆன்ரிச் நோர்ஜே, குர்பாஸ், ஸ்பென்சர் ஜான்சன், சேத்தன் சக்கரியா, லுவ்னித் சிசோடியா.

மறுபுறம் தக்கவைத்துள்ள வீரர்களின் பட்டியலில் ரகுவன்ஷி, அனுகுல் ராய், ஹர்ஷித் ராணா, ரிங்கு சிங் போன்ற இளம் வீரர்களையும், ரகானே, சுனில் நரைன், பவல் போன்ற மூத்த வீரர்களையும் தக்கவைத்துள்ளது. அதேபோல் தமிழக சுழற்பந்து வீச்சாளரான வருண் சக்ரவர்த்தியை கொல்கத்தா தக்கவைத்துள்ளது.

கொல்கத்தா அணி தக்கவைத்துள்ள வீரர்களின் முழு விவரம்: அஜிங்க்யா ரகானே, அங்கிரிஷ் ரகுவன்ஷி, அனுகுல் ராய், ஹர்ஷித் ராணா, மணீஷ் பாண்டே, ரமன்தீப் சிங், ரின்கு சிங், ரோவ்மன் பவல், சுனில் நரைன், உம்ரான் மாலிக், வைபவ் அரோரா, வருண் சக்ரவர்த்தி. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com