ஐபிஎல் ஏலம்: கொல்கத்தா அணிக்கு தேர்வான எம்.பி.யின் மகன்...யார் தெரியுமா ?

ஐ.பி.எல். மினி ஏலத்தில் 77 வீரர்கள் விற்கப்பட்டனர்.
மும்பை,
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் மினி ஏலம் அபுதாபியில் இன்று நடந்து வருகிறது. ஏலப்பட்டியலில் 240 இந்தியர், 110 வெளிநாட்டவர் என மொத்தம் 350 வீரர்கள் இடம் பெற்றிருந்தனர். ஒரே நாளில் நடத்தி முடிக்கப்பட்ட ஐ.பி.எல். மினி ஏலத்தில் 29 வெளிநாட்டவர், 48 இந்தியர் என 77 வீரர்கள் மொத்தம் ரூ.215.45 கோடிக்கு விற்கப்பட்டனர்.
இந்த நிலையில், இந்த ஏலத்தில் பீகார் எம்.பி. பப்பு யாதவின் மகன் சர்தக் ரஞ்சனை கொல்கத்தா அணி ரூ.30 லட்சத்துக்கு வாங்கியது. சர்தக் ரஞ்சன், டெல்லி அணிக்காக உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருகிறார்.
இந்த நிலையில் ஐபிஎல் போட்டியில் முழு மனதுடன் விளையாடி சாதிக்க வேண்டும் என தனது மகனுக்கு பப்பு யாதவ் அறிவுரை வழங்கியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
வாழ்த்துக்கள், உன் முழு மனதுடன் விளையாடு
உன் திறமையின் வலிமையில் உன் சொந்த அடையாளத்தை உருவாக்கு
உன் ஆசைகளை நிறைவேற்று, இப்போது சர்தக் என்ற பெயரில் நமது அடையாளம் உருவாக்கப்படும். என தெரிவித்துள்ளார்.






